வாடிக்கையாளர் என நினைத்து சானிடைசர் கொடுத்த வியாபாரி!! அடுத்த நிமிடம் நடந்த “ஷாக்“ (வீடியோ)

11 September 2020, 7:24 pm
UP Theft - updatenews360
Quick Share

உத்தரபிரதேம் : நகைக்கடையில் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக நகைக்கடையில் புகுந்து கொள்ளையர்கள் திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலத்தில் இந்த சம்பவம் பெருகி வருகிறது.

அந்த வகையில் உத்தரபிரதேச மாநில அலிகாரில் உள்ள நகைக்கடையில் வழக்கம் போல வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு நகையை காண்பித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 பேர் நகைக்கடையில் புகுந்தனர்.

அவர்களும் வாடிக்கையாளர்கள் என நினைத்த வியாபாரி, அவர்களுக்கு சானிடைசர் கொடுத்தார். சானிடைசரை கையில் தேய்த்துக் கொண்ட கும்பல், துப்பாக்கி எடுத்து அங்கிருந்தவர்களை மிரட்டி நகை பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் அந்தக் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. கொரோனா விழிப்புணர்வுடன் நூதன் திருட்டில் ஈடுபட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0