ரகசிய திருமணம் செய்து கொண்ட காதலர்கள் : வீட்டுசிறையில் இருந்த மனைவியை கொலை செய்து காதல் கணவன் தற்கொலை !!

Author: Udayachandran
15 October 2020, 8:06 pm
Love Murder - Updatenews360
Quick Share

ஆந்திரா : ரகசியமாக செய்து கொண்ட திருமண உறவை முறித்து கொண்ட காதல் மனைவி ஆன பிடெக் மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த காதல் கணவனின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த தேஜேஸ்வினி தனியார் கல்லூரி ஒன்றில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பெயிண்டர் வேலை செய்யும் சின்னசாமி என்பவருக்கும் மாணவி தேஜேஸ்வினிக்கும் இடையே கலந்த ஆறு ஆண்டு காலமாக காதல் இருந்து வந்தது.

இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தேஜேஸ்வினி பெற்றோர் வீட்டில் இருந்து வெளியில் செல்ல இயலாமல் தேஜேஸ்வினியை தடுத்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் தேஜேஸ்வினி வீட்டுக்கு சென்று சின்னசாமி தேஜேஸ்வினியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது தான் வைத்திருந்த கத்தியை எடுத்து தேஜேஸ்வினியை சின்னசாமி குத்தி கொலை செய்தார்.

பின்னர் அதே கத்தியால் தன்னைத் தானே குத்தி தற்கொலை முயற்சியில் சின்னசாமி ஈடுபட்டார்.
இரண்டு பேரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் ஓடிவந்து இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இரண்டு பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் தேஜேஸ்வினி ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.
சின்னசாமி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள விஜயவாடா போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 68

0

0