ராங் கால் மூலம் சிக்கிய ‘ரோமியோ‘ : முத்தம் கேட்ட மன்மதனை துவைத்து எடுத்த சகோ!!

15 May 2021, 12:15 pm
Youth Attacked - Updatenews360
Quick Share

ஆந்திரா : சித்தூர் அருகே இளம்பெண்ணுக்கு போன் செய்ததால் இளைஞனை அறைக்கு வரவைத்து கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். கடந்த சில நாட்களுக்கு முன் மகேஷ் செல்போனுக்கு தெரியாமல் கால் செய்த பெண், ராங்க நம்பர் என்று கூறி கட் செய்து விட்டார்.

ஆனால் மகேஷ், அந்த பெண்ணை தொடர்ந்து தொடர்பு கொண்டு ‘உன் குரல் அழகாக இருக்கிறது என கூறி காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்‘. ஆனால் அந்த பெண்ணோ மகேஷை எச்சரிக்கை செய்துள்ளார்.

மேலும் நேரில் சந்திக்க வேண்டும் என பெண்ணிடம் நிபந்தனை விதித்த மகேஷ், எப்படியாவது பெண்ணை தனது காதல் வலையில் சிக்க வைக்க வேண்டும் எண்ணினார். ஆனால் அங்கு தான் டிவிஸ்ட் காத்திருந்தது. சிக்கிக் கொண்டது அந்த பெண்ணல்ல, இந்த மகேஷ் என்று…

அந்த பெண்ணை சந்தித்த மகேஷ், ஒரு முத்தமாவது கொடு என்று கேட்டுள்ளான். அருகில் உள்ள லாட்ஜிக்கு வந்தால் முத்தம் கொடுக்கிறேன் என மகேஷை அந்த பெண் அழைத்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட அந்த லாட்ஜில் பெண்ணின் அண்ணன், உள்ளூர் ரவுடி 5 பேர் என்று, மகேஷை மொத்தமாக சேர்த்து மொத்தி துவைத்து எடுத்தனர்.

மேலும் இதனை வீடியோ படமாக்கி எவனாவது என் தங்கையை பார்த்தால் அவர்களுக்கும் இதுதான் கதி என்று வீடியோவை வாட்ஸ்அப் குரூப்பில் பரப்பியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி உள்ளது.

வீடியோவை வைத்து போலீசார் மகேஷ் என்பவரை அழைத்து விசாரிக்கையில் நடந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதனை அடுத்து மகேஷ் அளித்த புகாரின் பெயரில் பெண்ணின் அண்ணன் உள்பட மூன்று பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 250

0

0