தப்பை சுட்டிக்காட்டிய பெண்ணுக்கு ரூ.22 லட்சம் சன்மானம்… மைக்ரோசாப்ட் அளித்த சர்ப்ரைஸ்

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2021, 6:28 pm
Microsoft - Updatenews360
Quick Share

மைக்ரோசாப்ட்-இல் இருக்கும் பிழையை கண்டுபிடித்து அதனை தெரிவித்த இளம்பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசுத்தொகையை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் அதிதீ சிங். 20 வயதாகும் இந்த இளம்பெண் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் மேப் மை இந்தியாவின் பிழையை கண்டறிந்து தெரிவித்ததன் காரணமாக கல்வி ஆவணங்கள் இல்லாமல் இவரை பணியில் சேர்த்து கொண்டது.
மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முகநூலில் இருக்கும் பிழையை கண்டறிந்து அதனை தெரிவித்துள்ளார். அதற்கு முகநூல் நிறுவனம் இவருக்கு ரூ.5.5 லட்சம் பரிசு தொகையை வழங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிழையை கண்டுபிடித்துள்ளார். அந்நிறுவனத்தில் இருக்கும் ஆர்.இ.சி. என்ற தொலைக்குறியீடு செயல்படுத்துதல் பிரிவின் பிழையை கண்டுபிடித்து அதனை அந்நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணத்தால் இந்த இளம் பெண்ணை பாராட்டும் நோக்கத்தில் இவருக்கு 30 ஆயிரம் டாலர் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் 22 லட்சம் ரூபாய் ஆகும். இளம் வயதில் அதீத திறமை கொண்ட இளம்பெண் அதிதீ சிங்கின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 337

0

0