இதிலும் ஊழலா..? லஞ்சம் வாங்கிக்கொண்டு விமான நிலையத்தில் தனிமைப்படுத்தலிலிருந்து பயணிகளை தப்ப விட்ட மாநகாட்சி அதிகாரி..!

19 January 2021, 8:03 pm
Mumbai_Airport_UpdateNews360
Quick Share

வெளிநாட்டிலிருந்து மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும்போது கட்டாய தனிமைப்படுத்தலைத் தவிர்க்க விரும்பிய நபர்களிடமிருந்து, ரூ 4,000 வசூலித்து தப்பிக்க விட்ட 35 வயதான துணை பொறியாளர் கவாண்டே மற்றும் இரண்டு கூட்டாளிகளை சஹார் பொலிசார் கைது செய்தனர்.

முன்னதாக பிரிட்டன் வகை கொரோனா வெளியானதை அடுத்து, விமான நிலையத்தில் டிசம்பர் 23 முதல் துபாய், குவைத் மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் நபர்களை பி 6 கவுண்டரில் சோதனை செய்து வந்தனர்.

கவாண்டேவுக்கு லஞ்சம் வாங்கவும், போலி ஆவணங்களுடன் அவர் வெளியே அனுப்பி வைத்த நபர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம்.

போலி சுகாதார சான்றிதழ்களை தயாரிப்பதில் விமான நிலையத்தில் அமைந்துள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்துள்ள பெண்ணான அஷ்ரப் சாரங் மற்றும் விவேக் சிங் ஆகியோர் விமான நிலையத்தின் பாதுகாப்புப் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர்களிடம் சிக்கிய நிலையில், தனக்கு உதவியதாகக் கூறிய கவாண்டே குறித்தும் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர் என்று சஹார் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகாரிகள், அந்தப் பெண் வெளிப்படுத்திய தகவல் மூலம், கவாண்டேவின் பையை சோதனை செய்ததில், ஒரு போலி வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட ரப்பர் ஸ்டாம்ப் போன்ற போலி ஆவணங்களுடன் ஒரு பெரிய தொகையை போலீசார் கண்டுபிடித்தனர்.

“கவாண்டே ஒவ்வொரு நபரிடமும் ரூ 4000 லஞ்சம் வசூலிப்பதாக ஒப்புக்கொண்டார். அவரது வங்கிக் கணக்கு சோதனை செய்யப்படும். அவர் பணத்தை சாரங் மற்றும் சிங்குடன் பகிர்ந்து கொண்டார்.” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

இதற்கிடையே கவாண்டேவை மும்பை மாநகராட்சி தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.

Views: - 0

0

0