ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு..!!

Author: Aarthi Sivakumar
3 October 2021, 11:45 am
Sabarimalai- Updatenews360
Quick Share

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16ம் தேதி நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 17ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

அன்றைய தினம் புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தொடர்ந்து 21ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

தரிசனத்திற்கான ஆன்லைன் முன் பதிவு நேற்று காலை முதல் தொடங்கியது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Views: - 262

0

0