மகரவிளக்கு பூஜை:சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!

Author: kavin kumar
15 November 2021, 8:52 pm
Quick Share

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக வரும் இன்று நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோவிலின் மேல்சாந்தி, மாலிகபுரம் கோவில் மேல்சாந்தி, ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கலச பூஜை மற்றும் அபிஷேகம் நடத்தினார்.முன்னதாக, சபரிமலையில் தினமும் 30,000 பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது.ஆண்டுதோறும் வரும் இந்த சீசனுக்கு கேரளா, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வருவார்கள்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பக்தர்கள் வருகைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, அவர்கள் தரிசனத்துக்கு வரும் நாளில் 48 மணி நேரத்துக்கு முன் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று அல்லது ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்று கட்டாயம் கொண்டுவர வேண்டுமென தேவஸம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.

Views: - 451

0

0