சபரிமலை நடை திறப்பு… தொடர்ந்து 8 நாட்களுக்கு பூஜை : பக்தர்களுக்கு அனுமதி.. ஆனால் நிபந்தனை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2021, 12:35 pm
Sabarimalai- Updatenews360
Quick Share

திருவனந்தபுரம் : ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

கேரள சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, ஆவணி மாத பூஜை, நிறை புத்தரிசி பூஜை மற்றும் ஓணம் பண்டிகைக்காக நேற்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. ஆனால் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.இந்த மாதம் 23ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என்றும் ஆவணி மாத பூஜையை முன்னிட்டு ஓணம் பண்டிகையும் 21ஆம் சேர்ந்து வருவதால் 8 நாள் தொடர்ச்சியாக சபரிமலையில் பூஜைகள் வழிபாடு நடைபெற உள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி டிக்கெட்டு வழங்கப்பட உள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி ஆர் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 360

0

0