ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு… சபரிமலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு… என்னென்ன தெரியுமா..?
Author: Babu Lakshmanan11 December 2021, 11:00 am
கொரோனா தொற்றினால் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.
கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது, நாளொன்றுக்கு குறிப்பிட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதியளிக்கப்படும், பம்பை நதியில் குளிக்க அனுமதியில்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கேரளாவின் கொரோனா தொற்று சற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பக்தர்கள் இனி செல்லலாம். பம்பை ஆற்றில் குளிக்கவும், தர்ப்பணம் செய்யும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பம்பை ஆற்றில் குளிப்பது தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்கள் சன்னிதானத்தில் இரவில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சன்னிதானத்தில் 500 அறைகள் கொரோனா நோய்த்தடுப்பு விதிமுறைகளின்படி தயார்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த கூடுதல் தளர்வுகள் மேலும் அவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0