சபரிமலையில் வரும் 16ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி ! நிபந்தனைகளை வெளியிட்ட கேரள அரசு!!

By: Udayachandran
10 October 2020, 6:26 pm
Sabarimalai - Updatenews360
Quick Share

கேரளா : சபரிமலையில் வரும் 16ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக கேரளாவில் உள்ள பிரசித்த பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் மண்டல பூஜைக்காக வரும் நவம்பர் 16ஆம் தேதி முதல் தினசரி ஆயிரம் பக்தர்களை மட்டும் அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டது. மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி விழா நடக்கும் நாட்களில் மட்டும் 5 ஆயிரம் பேரை அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதே போல வார இறுதி நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களை சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய முயற்சியை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களை அனுமதிப்பதிற்கான முன்னோட்டம்க வரும் 16ஆம் தேதி முதல் தினசரி 250 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்ம பல மாதங்களாக கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாத பூஜை நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நடப்பு மண்டல மகர விளக்கு சீசனில் கொரோனா கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்க செய்ய குழு அமைக்கப்பட்டது.

கேரள தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழு அளித்த அறிக்கையின்படி, தினசரி 1000 பக்தர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 10 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பக்தர்கள் மட்டும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையான வார இறுதி நாட்களில் 2 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என கேரள அரசு கூறியுள்ளது. அதே போல மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும் நாட்களில் 5 ஆயிரம் பேர் தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 78

0

0