ராகுல் மற்றும் பிரியங்காவுடன் மீட்டிங்..! மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்..? ராஜஸ்தான் அரசியலில் புதிய திருப்பம்..!

10 August 2020, 5:26 pm
sachin_pilot_rahul_gandhi_updatenews360
Quick Share

ராஜஸ்தானில் ஆகஸ்ட் 14 முதல் துவங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, சச்சின் பைலட் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், சச்சின் பைலட் இன்று ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோரை டெல்லியில் சந்தித்தார். 

இந்த சந்திப்பு ராகுல் காந்தியின் இல்லத்தில் பிற்பகலில் நடந்தது என்றும் சாதகமான முடிவு எதிர்பார்க்கப்படுகிறது என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பைலட் காங்கிரஸின் உயர்மட்டத் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர் மீண்டும் கட்சிக்குத் திரும்புவதற்கான ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 

கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து இந்த சச்சின் பைலட் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இடைக்கால கட்சித் தலைவர் சோனியா காந்தியின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 ஜன்பத்தில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரு தரப்பிலிருந்தும் எந்த முன் நிபந்தனைகளும் இல்லை என்றும், மாநிலத்தில் தனது அரசாங்கத்தை அச்சுறுத்தியுள்ள நெருக்கடிக்கு மகிழ்ச்சியான முடிவு கிடைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

பைலட் முகாம் அசோக் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்த பின்னர், அசோக் கெலாட் அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த பிரச்சினையை தீர்க்க, மூத்த கட்சித் தலைவர் அகமது படேல் முன்வந்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக காங்கிரஸ் பைலட்டை துணை முதல்வர் பொறுப்பிலிருந்தும், மாநிலக் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும் நீக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று இரவு, ஜெய்சால்மர் ஹோட்டலில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

அங்கு கெலாட் முகாமில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கிளர்ச்சியாளர்களை கட்சிக்குள் இணைப்பது குறித்து கட்சிக்குள் இருவேறு கருத்துக்கள் அப்போது எழுந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு சில எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் கெலாட் அரசாங்கத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு கிளர்ச்சியாளர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தாலும், மற்றவர்கள் அத்தகைய மன்னிக்கும் மனநிலையில் இல்லை. இதற்கிடையில், ஜெய்சால்மரில் உள்ள கெலாட் முகாம் டெல்லியில் நடைபெறும் அனைத்து விவாதங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்த சந்திப்பு குறித்து ராஜஸ்தானில் உள்ள ஒரு சில அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை குறித்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் கோரப்பட்டதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

இதையடுத்து காங்கிரஸ் தலைமை சச்சின் பைலட்டின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் அவர் மீண்டும் காங்கிரசிற்குள் இணைவது உறுதியாகும்.

ஒருவேளை அவரை மீண்டும் காங்கிரஸ் தலைமை கட்சிக்குள் இணைத்துக் கொண்டால், மாநில அரசியலிலிருந்து வெளியேற்றி டெல்லி அரசியலுக்கு அவரை கொண்டுவருவார்கள் என காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Views: - 5

0

0