டிராக்டர் பேரணி வன்முறைக்கு மாறியதால் அதிருப்தி..! போராட்டத்திலிருந்து விலகுவதாக விவசாய அமைப்பு அறிவிப்பு..!

26 January 2021, 5:05 pm
tractor_rally_updatenews360
Quick Share

டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்.) எனும் அமைப்பு, விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த வன்முறைச் செயல்களால் டிராக்டர் பேரணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

டெல்லியில் தற்போது நடந்து வரும் விரும்பத்தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளுக்கு கண்டணம் தெரிவிப்பதோடு, இதற்காக வருத்தப்படுவதாக எஸ்.கே.எம். தெரிவித்துள்ளது.

முன்னதாக குடியரசு தின அணிவகுப்பிற்கு குந்தகம் விளைவிக்காமல் அமைதியான டிராக்டர் பேரணிக்கு வேளாண் அமைப்புகள் காவல்துறையிடம் அனுமதி வாங்கியிருந்தனர். 

ஆனால் இன்று காலை முதலே லத்திகள் மற்றும் வாள் போன்ற ஆயுதங்களைக் காட்டி, முக்கோண மற்றும் தொழிற்சங்கக் கொடிகளை வைத்திருக்கும், டிராக்டர்களில் இருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தடைகளை உடைத்து, போலீசாருடன் மோதிக் கொண்டு, பல்வேறு இடங்களிலிருந்து நகரத்திற்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டு, மிகவும் அநாகரீகமாக குடியரசு தினத்தில் கொடிக் கம்பத்தில் ஏறினர்.  

இதையடுத்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு, “இன்று நடந்த விரும்பத்தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும் இதற்காக வருந்துகிறோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து எங்களை விலக்கிக் கொள்கிறோம். எங்களது முயற்சிகள் அனைத்தையும் மீறி, சில அமைப்புகளும் தனிநபர்களும் வழியை மீறி கண்டிக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 

சமூக விரோத நபர்கள் ஊடுருவியுள்ளனர். இல்லையெனில் அமைதியான இயக்கம் இவ்வளவு பெரிய வன்முறையாக மாறாது. அமைதிதான் எங்கள் மிகப்பெரிய பலம் என்றும், எந்த மீறலும் இயக்கத்தை பாதிக்கும் என்றும் நாங்கள் எப்போதும் கருதுகிறோம்.” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“எங்கள் ஒழுக்கத்தை மீறிய இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் நாங்கள் எங்களை விலக்கிக் கொள்கிறோம். அணிவகுப்பின் பாதை மற்றும் விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அனைவரிடமும் நாங்கள் கடுமையாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

எந்தவொரு வன்முறை நடவடிக்கையிலும் அல்லது தேசிய அடையாளங்களையும் கௌரவத்தையும் களங்கப்படுத்தும் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். இதுபோன்ற எந்தவொரு செயலிலிருந்தும் விலக வேண்டும் என அனைவருக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.” என்று அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Views: - 5

0

0