சானிடைசர் குடித்து 4 பேர் பலி.! ஆந்திராவில் தொடரும் சோகம்.!!

8 August 2020, 1:31 pm
Saniztizer Drunk Dead - Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதியில் உள்ள தூய்மை பணியாளர்கள் காலனியில் வசிக்கும் நான்குபேர் நேற்று சானிடைசர் குடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி நகராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணிபுரியும் வீரய்யா (வயது 54), குமாரசாமி (வயது 30) ஆகிய 2 பேர் மற்றும் குப்பை அள்ளுபவர்கள் இரண்டு பேர் என மொத்தம் 4 பேர் சானிடைசரை குடித்து பரிதாபமாக மரணமடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மரணமடைந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் சானிடைசர் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Views: - 4

0

0