இஸ்ரோ விஞ்ஞானியை போலி உளவு வழக்கில் சிக்கவைத்தது எதற்காக..? சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

15 April 2021, 2:28 pm
Nambi_Narayanan_UpdateNews360
Quick Share

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு எதிரான 1994 உளவு வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்த வழக்கில் அவரை சிக்கவைக்க போலீஸ் சதித்திட்டம் தொடர்பான விசாரணையை  நம்பி நாராயணன் வரவேற்றுள்ளார். “நான் மகிழ்ச்சியடைகிறேன். நாட்டின் கிரையோஜெனிக் திட்டத்தை தாமதப்படுத்தும் சதித்திட்டத்திற்கு வழிவகுத்தவர்கள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையை நான் நாடினேன்” என்று முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி திருவனந்தபுரத்தில் தெரிவித்தார்.

1994’ஆம் ஆண்டு நம்பி நாராயணன் தொடர்பான உளவு வழக்கில் தவறு செய்த காவல்துறை அதிகாரிகளின் பங்கு குறித்து உயர் மட்டக் குழு தாக்கல் செய்த அறிக்கையை விரைவாக பரிசீலிக்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 5’ம் தேதி, குழுவின் அறிக்கையை தேசிய பிரச்சினை என்று கூறி அவசர விசாரணை மற்றும் பரிசீலிக்கக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான பெஞ்ச், அது நியமித்த குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு, இந்த வழக்கில் மேலதிக விசாரணையை மேற்கொள்ளுமாறு சிபிஐயிடம் கேட்டுக் கொண்டது, இதில் இந்தியாவின் விண்வெளித் திட்டம் குறித்த சில ரகசிய ஆவணங்களை வெளிநாடுகளுக்கு இரண்டு விஞ்ஞானிகள் மற்றும் நான்கு பேர் மாற்றியுள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கள் அடங்கும்.

நீதிமன்றம் செப்டம்பர் 14, 2018 அன்று குழுவை நியமித்தது மற்றும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை பெரும் அவமானத்திற்கு உட்படுத்தியதற்காக கேரள அரசுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டது.

நாராயணனின் சட்டவிரோத கைதுக்கு கேரளாவில் அப்போதிருந்த உயர் போலீஸ் அதிகாரிகள் தான் காரணம் என்று சிபிஐ தனது முந்தைய விசாரணையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 34

0

0