பிரஷாந்த் பூஷனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்..!
25 August 2020, 4:00 pmபேச்சு சுதந்திரம் மற்றும் நீதித்துறைக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் ஆகியோருக்கு எதிரான 2009 அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
நவம்பர் 2009’இல் உச்ச நீதிமன்றம், ஒரு செய்தி இதழுக்கு அளித்த பேட்டியில், தற்போது அப்போது பதவியிலிருந்த மற்றும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக பூஷன் மற்றும் தேஜ்பால் ஆகியோருக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. தேஜ்பால் பிரஷாந்த் பூஷன் பேட்டியளித்த பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.
நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு, மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக ஆஜரானார். அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த 10 கேள்விகளை பிரஷாந்த் பூஷன் எழுப்பியதாகவும், அவை அரசியலமைப்பு பெஞ்சால் தீர்க்கப்பட வேண்டும் என வாதிட்டார்.
“இவை விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய சில பெரிய பிரச்சினைகள். எனவே ஒரு பொருத்தமான பெஞ்சால் தீர்ப்பளிக்கப்படலாம்” என்று அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியது.
இந்த விவகாரம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இது செப்டம்பர் 10’ம் தேதி பொருத்தமான பெஞ்ச் முன் பட்டியலிடப்படும் என்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் பெஞ்ச் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2’ம் தேதி ஓய்வு பெறும் நீதிபதி மிஸ்ரா, இந்த விவகாரத்திற்கு அதிக நேரம் தேவைப்படும் என்றும், “இதை ஒரு பொருத்தமான பெஞ்சில் விட்டுவிடுவோம்” என்றும் கூறினார்.
0
0