ஈவிஎம்மில் பதிவான வாக்குகளை 100% விவிபேட் இயந்திரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமா..? உச்சநீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு..!

19 April 2021, 8:34 pm
EVM_VVPAT_UpdateNews360
Quick Share

தேர்தலில் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய விவிபேட் சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (ஈ.வி.எம்) வாக்கு எண்ணிக்கையுடன் 100 சதவீதம் பொருத்திப் பார்க்க வேண்டும் என்று கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் தேர்தல் செயல்முறையில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

“தேர்தல் நடவடிக்கைகளுக்கு நடுவில் நாங்கள் தலையிடப் போவதில்லை” என்று தலைமை நீதிபதி எஸ். எ போப்டே மற்றும் நீதிபதிகள் ஏ எஸ் போபண்ணா மற்றும் வி ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அனைத்து இடங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மே 2’ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு ஏதேனும் மனு அளித்திருக்கிறீர்களா என்று மனுதாரர் கோபால் சேத்துக்கு ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் முன்பு கல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகியதாக அவர் கூறினார். இது தொடர்பான உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவு பிறப்பித்ததாக உயர் நீதிமன்றம் கூறியதாக வழக்கறிஞர் வாதிட்டார்.

“சிறப்பு விடுப்பு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேற்கூறியவற்றின் தொடர்ச்சியாக, நிலுவையில் உள்ள இடைக்கால விண்ணப்பங்கள் ஏதேனும் இருந்தால், அவை தீர்த்து வைக்கப்படுகின்றன” என்று உச்ச நீதிமன்றம் பின்னர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தலில் சட்டமன்ற பிரிவு ஒன்றுக்கு ஐந்து வாக்குச் சாவடிகளாக ஈ.வி.எம்’களுடன் விவிபேட் சீட்டுகளை சீரற்ற முறையில் பொருத்தி பார்க்குமாறு உச்சநீதிமன்றம் கடந்த 2019’இல் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாது, முழு வாக்காளர்களுக்கும் அதிக திருப்தியை அளிக்கும் என்று அப்போது கூறியது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னர், பாராளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதியின் சட்டசபை பிரிவுக்கு ஒரு வாக்குச் சாவடியில் விவிபேட் சீட்டுகளை சீரற்ற முறையில் எண்ணும் முறையை தேர்தல் ஆணையம் பின்பற்றியது.

“இந்த முறை துல்லியமான தேர்தல் முடிவுகளை உறுதி செய்கிறது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று கூறி, தற்போதுள்ள தேர்தல் செயல்முறையின் நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டை சந்தேகிக்கவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் 2019’இல் குறிப்பிட்டது.

Views: - 103

0

0