மோடியின் தேர்தல் வெற்றி செல்லுமா செல்லாதா..? உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

24 November 2020, 2:40 pm
PM_Modi_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடியை மக்களவைக்கு 2019’ல் வாரணாசி தொகுதியில் இருந்து தேர்வு செய்ததை எதிர்த்து பணிநீக்கம் செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) கான்ஸ்டபிள் தேஜ் பகதூர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது சரியே என உச்சநீதிமன்றம் இன்று கூறியுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பை எதிர்த்து தேஜ் பகதூர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

படையினருக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புகார் அளிக்கும் வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டதை அடுத்து 2017’ல் தேஜ் பஹதூர் எல்லை பாதுகாப்புப் படையிலிருந்து விலக்கப்பட்டார்.

பின்னர் கடந்த வருடம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பகதூரின் வேட்பு மனுக்களை கடந்த ஆண்டு மே 1’ஆம் தேதி தேர்தல் அதிகாரி நிராகரித்திருந்தார். 

பகதூரின் வேட்பு மனுக்களை நிராகரித்தபோது, ​​”ஊழல் அல்லது அரசுக்கு விசுவாசமற்ற தன்மைக்காக அவர் படையிலிருந்து விலக்கப்படவில்லை எனும் சான்றிதழ் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த முறையில் இல்லை” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு மே 9’ஆம் தேதி, வாரணாசி மக்களவைத் தொகுதியில் இருந்து தனது வேட்பு மனுக்களை நிராகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி, தேர்தல் ஆணையம் அப்போது மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து நரேந்திரமோடியின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, மனு தாக்கல் செய்த நிலையில், தற்போது அதையும் தள்ளுபடி செய்துள்ளது.

Views: - 18

0

0

1 thought on “மோடியின் தேர்தல் வெற்றி செல்லுமா செல்லாதா..? உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

Comments are closed.