மன்னிப்பு கேட்பதால் என்ன பிரச்சனை? பிரசாந்த் பூஷணுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!!

26 August 2020, 9:44 am
Prashanth Bhushan- Updatenews360
Quick Share

டெல்லி : மன்னிப்பு கேட்பதால் என்ன பிரச்சனை என பிரசாந்த் பூஷணுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளை டிவிட்டரில் விமர்ச்சித்த விவகாரத்தில் சிக்கிய பிரசாந்த் பூஷன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவர் மூத்த வழக்கறிஞர் என்பதால் மன்னிப்பு கோரினால் அவரை விடுவிக்க முடியும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இதற்கான அவகாசமும் பிரசாந்த் பூஷணுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை மன்னிப்பு கேட்காத பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில் மன்னிப்பு கேட்பதால் என்ன பிரச்சனை, மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதும், நீதிபதிகள் மீதும் நம்பிக்கை இழக்கும் வகையில் மூத்த வழக்கறிஞக்ள் கருத்து தெரிவிக்க கூடாது என பிரசாந்த் பூஷணை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Views: - 22

0

0