ஆந்திராவில் தனியார் பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி பேருந்தில் திடீர் தீ : 3 பேருந்துகள் எரிந்து நாசம்!!

28 January 2021, 2:09 pm
Andhra School Van Fire- Updatenews360
Quick Share

ஆந்திரா : தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 தனியார் பள்ளிப் பேருந்துகள் எரிந்து சேதமடைந்தன.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பெண்டுர்த்தியில் பிரபல தனியார் பள்ளிக்கூடம் (நாராயணா பள்ளி) செயல்பட்டு வருகிறது. தெலுங்கானா,ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அந்த பள்ளிக்கு கிளைகள் உள்ளன.

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது ஆந்திர மாநில அமைச்சராக இருந்த நாராயணா குடும்பத்திற்கு சொந்தமான அந்த பள்ளியின் பெண்டுர்த்தி வளாகத்தில் வழக்கம் போல் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கொரோனா காரணமாக கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேல் அந்தப் பேருந்துகள் ஓடவில்லை. இந்த நிலையில் இன்று அவற்றில் மூன்று பேருந்துகள் திடீரென்று தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்த பெண்டுர்த்தி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த அணைத்தனர்.

தீ விபத்து பற்றி பெண்டுர்த்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். பள்ளி வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் ஏற்பட்ட தீ பரவி பேருந்துகள் தீப்பற்றி எரிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Views: - 0

0

0