வருகை பதிவுக்கு ரிலாக்ஸ்: புதுச்சேரியில் 6 மாத இடைவெளிக்கு பின் பள்ளிகள் திறப்பு

Author: Aarthi
8 October 2020, 10:45 am
pondycheery school- updatenews360
Quick Share

புதுச்சேரி: 6 மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் வகுப்புகள் துவங்கின.

6 மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த 5ம் தேதி முதல் மாணவர்களுக்கான இருக்கைகள், மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், இன்று முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடங்கியுள்ளன.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 3 நாட்கள், 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு 3 நாட்கள் என வாரத்தில் 6 நாட்கள், காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டும் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் ஒப்புதலுடனே பள்ளிகளுக்கு வர வேண்டும் எனவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Views: - 44

0

0