கொரோனா பரவல் அச்சம்: நாளை முதல் அனைத்து பள்ளிகளும் மூடல்…மத்தியபிரதேச அரசு உத்தரவு…!!

Author: Aarthi Sivakumar
14 January 2022, 3:13 pm
Quick Share

போபால்: மத்தியபிரதேசத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தில் பள்ளிகள் 50 சதவிகித இருக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. மாணவ மற்றும் மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து நேரடி வகுப்புகளில் பங்கேற்று வந்தனர். இதற்கிடையில், அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

அங்கு நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 31 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 31ம் தேதி வரை மூடப்படுவதாக மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

நாளை முதல் 31ம் தேதி வரை 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து தனியார், அரசு பள்ளிகளும் மூடப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இன்று நடைபெறும் மகா சங்கராந்தி நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை.

Views: - 176

0

0