கிரிக்கெட் விளையாடுவதில் தகராறு..! 17 வயது சிறுவனை குத்திக் கொன்ற சிறுவன்..!

19 January 2021, 6:03 pm
Death_UpdateNews360
Quick Share

டெல்லியின் நாங்லோய் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், 17 வயது சிறுவன் மற்றொரு சிறுவனால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் தந்தை உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும் அவனது நண்பர்கள் குழுவும் வந்து அந்த மைதானத்தில் விளையாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டபோது ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது குழுவுடன் வழக்கமாக அந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவார் என்றும் எனவே உயிரிழந்த சிறுவன் அதே மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதைக் கண்டபோது ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து மோதல் வெடித்துள்ளது என ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.

முன்னதாக சனிக்கிழமையன்று, குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் உயிரிழந்த சிறுனுடன் வேறு காரணங்களுக்காக சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் அடுத்த நாள் கிரிக்கெட் விளையாடுவதைக் கண்டதை அடுத்து மோதல் அதிகமாகி கத்திக் குத்து நடந்ததாக அவர் கூறினார். கத்திக் குத்தில் ஈடுபட்ட சிறுவன், தனது நண்பனை அனுப்பி தந்தையிடம் கத்தியை வாங்கி வரச் சொல்லி இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கத்தியால் குத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் மயக்கமடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் தனது கூட்டாளிகளுடன் தப்பி ஓடிவிட்டார். சிறுவன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கு பதிவுசெய்த போலீஸ், மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளது.

Views: - 0

0

0