அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் இழுத்து மூடப்படும்: அதிரடி அறிவிப்பை வெளியிடவுள்ள தெலங்கானா அரசு..!!

23 June 2021, 2:13 pm
andra school - updatenews360
Quick Share

தெலங்கானா: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு தெலங்கானா அரசு விரைவில் தடை விதிக்க உள்ளது. இதற்காக அரசாணையையும் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநில அரசு தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் விதத்தில் கடந்த ஆண்டு அரசாணை 46ஐ அமல் படுத்தியது. இதன்படி, தனியார் பள்ளி நிர்வாகம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது.

டியூஷன் கட்டணத்தை கூட ஒவ்வொரு மாதமும் வசூலிக்க வேண்டுமே தவிர மொத்தமாக வசூலிக்க கூடாது. இதற்கான கட்டணத்தையும் அரசு நிர்ணயித்துள்ளது. இதனை மீறி வசூலித்தால் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு சீல் வைக்கப்படும். இந்த அரசாணையை கடந்த 2019-20ம் கல்வி ஆண்டில் மீறிய 11 தனியார் பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த அரசாணையை இந்த ஆண்டும் அமல்படுத்த தெலங்கானா அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு பெற்றோர்களிடையே பலத்த வரவேற்பு உள்ளதால், மீண்டும் இதனை அமல்படுத்த தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஓரிரு நாட்களில் தெலங்கானா மாநில கல்வித்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி அறிவிக்க உள்ளார்.

Views: - 220

0

0