இந்தியா வந்தடைந்தது அடுத்த பேட்ச் ரஃபேல் போர் விமானங்கள்..! குஜராத்தில் நிலைநிறுத்தம்..!

5 November 2020, 10:59 am
Rafale_Jets_Gujarat_Updatenews360
Quick Share

பிரான்சிலிருந்து இடை நிற்காமல் பறந்து வந்த மூன்று ரஃபேல் போர் விமானங்களின் இரண்டாவது தொகுதி நேற்று இரவு குஜராத்தில் உள்ள ஜாம்நகர் விமான தளத்திற்கு வந்து சேர்ந்தது. இதன் மூலம் விமானப்படையில் உள்ள மொத்த ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

இந்தியா பிரான்ஸ் நிறுவனத்துடன் ரூ.59,000 கோடி செலவில் 36 விமானங்களை வாங்குவதற்கான அரசுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து ரஃபேல் ஜெட் விமானங்களின் முதல் தொகுதி ஜூலை 29 அன்று இந்தியாவை வந்தடைந்தது.

இந்த ஐந்து விமானங்களும்  செப்டம்பர் 10’ஆம் தேதி இந்திய விமானப்படையில் முறையாக இணைக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தகட்டமாக தற்போது மூன்று விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளது. 

“ரஃபேல் விமானத்தின் இரண்டாவது தொகுதி நவம்பர் 04, 2020 அன்று இரவு 8:14 மணிக்கு பிரான்சில் இருந்து இடைவிடாது பறந்த பின்னர் இந்தியா வந்தடைந்தது” என்று இந்திய விமானப்படை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்சில் உள்ள இந்திய தூதரகமும் ஒரு ட்வீட் வெளியிட்டு விமானங்கள் இந்தியா வந்தடைந்ததை குறிப்பிட்டுள்ளது.

பிரான்சிடமிருந்து வாங்கப்படும் அனைத்து 36 ரஃபேல் ஜெட் விமானங்களும் 2023’க்குள் இந்தியா வந்தடையும் என்று அக்டோபர் 5’ம் தேதி விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதோரியா தெரிவித்தார்.

விமான-மேன்மை மற்றும் துல்லியமான தாக்குதல்களுக்கு பெயர் பெற்ற ரஃபேல் ஜெட் விமானங்கள், ரஷ்யாவிலிருந்து சுகோய் ஜெட் விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்ட 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கொள்முதல் செய்யும் முதல் பெரிய போர் விமானங்களாகும்.

கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக இந்தியாவும் சீனாவும் எல்லையில் மோதலைக் கொண்டிருக்கும் நிலையில் முன்னர் இணைக்கப்பட்ட ஐந்து ஜெட் விமானங்களும் கிழக்கு லடாக்கில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது வந்துள்ள வந்துள்ள மூன்று ஜெட் விமானங்களும், சீனாவுக்கு செக் வைக்கும் விதமாகவே சேவையில் ஈடுபடுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

Views: - 22

0

0

1 thought on “இந்தியா வந்தடைந்தது அடுத்த பேட்ச் ரஃபேல் போர் விமானங்கள்..! குஜராத்தில் நிலைநிறுத்தம்..!

Comments are closed.