மலபார் போர் ஒத்திகையின் இரண்டாம் கட்டம் தொடக்கம்..! உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் பங்கேற்பு..!

17 November 2020, 1:20 pm
Malabar_Exercise_UpdateNews360
Quick Share

இந்திய கடற்படையின் விக்ரமாதித்ய விமானம் தாங்கி போர் கப்பல், அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ் போர்க்கப்பல் மற்றும் ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பானிய கடற்படைகளைச் சேர்ந்த பல முன்னணி போர்க்கப்பல்கள் இன்று தொடங்கி, மலபார் கூட்டு போர் ஒத்திகையை வடக்கு அரேபிய கடலில் நான்கு நாட்கள் நடக்கிறது. 

இந்த ஒத்திகை சீனாவுக்கு எதிராக உருவாகியுள்ள குவாட் கூட்டணியில் உள்ள நான்கு நாடுகளின் கடற்படைகளிடையே ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உள்ளடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலபார் பயிற்சியின் முதல் கட்டம் நவம்பர் 3 முதல் 6 வரை வங்காள விரிகுடாவில் நடந்தது. இதில் நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் வான்வழி போர் எதிர்ப்பு நடவடிக்கைகள் உட்பட பல சிக்கலான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 

கிழக்கு லடாக்கில் ஆறு மாதங்களுக்கும் மேலாக கசப்பான எல்லை நிலைப்பாட்டில் இந்தியாவும் சீனாவும் அடைபட்டிருக்கும் நேரத்தில் மெகா பயிற்சி நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.

“மலபார் இரண்டாம் கட்ட பயிற்சி நவம்பர் 17 முதல் 20 வரை வடக்கு அரேபிய கடலில் நடத்தப்படும்” என்று கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது விக்ரமாதித்ய விமானம் தாங்கி போர்க் கப்பல் மற்றும் நிமிட்ஸ் விமானம் தாங்கி போர்க் கப்பல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

இந்த பயிற்சி “கடல்சார் பிரச்சினைகள் குறித்த நான்கு துடிப்பான ஜனநாயக நாடுகளிடையே மேம்பட்ட கருத்துக்களை ஒருங்கிணைப்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலும் திறந்த, உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கிற்கான அவர்களின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது” என்று இந்திய கடற்படை வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் :
இந்த பயிற்சியில் அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கி கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் தலைமையிலான அமெரிக்க போர்க்கப்பலின் பங்கேற்பு அதன் ஒட்டுமொத்த தாக்கத்தை கணிசமாக மேம்படுத்தும் என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்தார். யுஎஸ்எஸ் நிமிட்ஸ் உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விமானம் தாங்கி போர்க் கப்பல் குழு என்பது ஒரு மெகா கடற்படைக்கு ஒத்தது ஆகும். இதில் ஒரு விமானம் தாங்கி கப்பல் உள்ளது. அதனுடன் ஏராளமான போர் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் உள்ளன. பயிற்சியில், நிமிட்ஸ் உடன் க்ரூஸர் பிரின்ஸ்டன் மற்றும் டிஸ்ட்ராயர் ஸ்டெரெட் ஆகிய கப்பல்கள் மற்றும் பி 8 ஏ கடல்சார் உளவு விமானம் பயிற்சியில் பங்குபெறுகிறது.

ராயல் ஆஸ்திரேலிய கடற்படை அதன் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டருடன் போர் கப்பல் பல்லாரத்தை பயிற்சியில் ஈடுபடுத்துகிறது.

“இரண்டு கப்பல்களும், மற்ற கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பங்கேற்கும் கடற்படைகளின் விமானங்களும், நான்கு நாட்களில் அதிக தீவிரம் கொண்ட கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும்” என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Views: - 31

0

0