“கங்கையில் செயல்படும் அனைத்து நீர்மின் திட்டங்களையும் நிறுத்துக”..! மோடிக்கு கடிதம் எழுதிய ஹரித்வார் சாமியார்..!

7 March 2021, 6:29 pm
BRAHAMCHARI_ATMABODHANAND_UPDATENEWS360
Quick Share

தண்ணீர், எலுமிச்சை, உப்பு மற்றும் தேன் போன்றவற்றை மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு விரதம் இருந்து வரும் ஹரித்வாரின் மாத்ரி சதன் ஆசிரமத்தின் பஹாம்சரி ஆத்மபோதானந்த், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக தான் தபஸ்யா எனும் விரதம் மேற்கொண்டு வருவதாக விவரித்தார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியானஆத்மபோதானந்த், 2014’ஆம் ஆண்டில் பத்ரிநாத் யாத்திரைக்குப் பிறகு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டார். பத்ரிநாத்தில் அவர் மாத்ரி சதன் ஆசிரம நிறுவனர் சுவாமி சிவானந்த் சரஸ்வதியைச் சந்தித்தார்.

பிப்ரவரி 23 முதல் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கியதில் இருந்து, 2 கிலோ உடல் எடையை இழந்த பிரம்மச்சாரி ஆத்மபோதானந்த், தனது கோரிக்கைகள் அனைத்தையும் உண்மையாக நிறைவேற்றாவிட்டால் தனது போராட்டத்தை கைவிட மாட்டேன் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

கங்கை நதிக்கரையின் 5 கி.மீ சுற்றளவில் இயங்கும் கற்களை தூளாக்கும் ஆலைகள் தடை செய்யப்பட வேண்டும் என்றும், ரைவாலாவிலிருந்து போக்பூர் வரை குவாரி செயல்படுவதற்கு தடை, கங்கை கவுன்சில் அமைத்தல், கங்கை சட்டத்தை விரைவாக இயற்றுவது மற்றும் இந்து மதத்தின் புனிதமான கங்கை நதியின் தடையற்ற ஓட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆத்மபோதானந்த் கோருகிறார்.

“தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சுரங்கங்கள் தொடர்கின்றன என்பதும், கங்கை நதியின் ஓட்டம் பல நீர்மின் திட்டங்கள் மூலம் நிறுத்தப்படுவதும் மிகவும் வருத்தமளிக்கிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது தான் கேதார்நாத் வெள்ளத்திற்கு வழிவகுத்தது. 2013’ஆம் ஆண்டில் மற்றும் சமீபத்தில் தபோவன் பனிப்பாறை வெடிப்பபை ஏற்படுத்தியுள்ளது.” என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஆத்மபோதானந்த் எழுதினார்.

பிரஹாம்சரி ஆத்மபோதானந்த் நோன்பு நோற்பதாக சாதனை படைத்துள்ளார். குவாரி மற்றும் நீர் மின் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் 2018 அக்டோபர் 14 முதல் 2019 மே 4 வரை 194 நாட்கள் சாதனை படைத்திருந்தார்.

சுவாமி சிவானந்த் சரஸ்வதியின் மற்றொரு சீடரான சாத்வி பத்மாவதிக்கு ஆதரவாக அவர் போராட்டத்தில் அமர்ந்தபோது, 2020 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அவரது கடைசி போராட்டம் 41 நாட்கள் நீடித்தது. அவர் கடந்த ஆண்டு 100 நாட்கள் போராட்டத்தை நடத்தினார்.

அக்டோபர் 2018’இல் பிரஹாம்சாரிக்கு முன்னர், முன்னாள் இந்திய தொழில்நுட்பக் கழக பேராசிரியர் கியான் ஸ்வரூப் சனந்த் மறைந்த சில மணி நேரங்களிலேயே, சத்ரி கோபால் தாஸ், மாத்ரி சதன் ஆசிரமத்தில் மரணப் போராட்டத்தைத் தொடங்கினார்.

குவாரி செயல்படுவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்றும் கங்கை நதி படுகையில் இருந்து அனைத்து கல் குவாரிகளையும் அகற்ற வேண்டும் என்றும் பாகீரதி, அலக்நந்தா மற்றும் கங்காவின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் உள்ள நீர் மின் திட்டங்களை நிறுத்த வேண்டும் என்றும் கோரி சுவாமி சனந்த் தனது விரதத்தை 2018 ஜூன் 20 அன்று தொடங்கினார். அவர் அக்டோபர் 11, 2018 அன்று 112 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அதே கோரிக்கைகளின் பேரில், மற்றொரு மாத்ரி சதன் சீர் சுவாமி நிக்மானந்த் ஜூன் 13, 2011 அன்று காலமானார். அவர் 114 நாட்கள் காலவரையறையின்றி மாத்ரி சதன் ஆசிரமத்தில் விரதம் இருந்தார்.

Views: - 7

0

0