தீபாவளி பட்டாசு…வெடிக்கவும், விற்பனைக்கு தடை: அதிரடி உத்தரவிட்ட அரியானா அரசு…!!

Author: Aarthi Sivakumar
31 October 2021, 3:45 pm
Quick Share

கவுகாத்தி: அரியானாவில் 14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை அடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில், பட்டாசுகள் வெடிக்க கால நேரம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில், அரியானாவில் 14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லிக்கு அருகில் உள்ளபிவானி, சர்கி தத்ரி, பரிதாபாத், குருகிராம், ஜஜ்ஜார், ஜிந்த், கர்னல், மகேந்திரகர்க், நுக், பல்வல், பானிபட், ரேவரி, ரோதக் மற்றும் சோனிபட் மாவட்டங்களில் பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமும் விற்பனைக்கும் அனுமதியில்லை.

திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பசுமை பட்டாசுகளை தான் பயன்படுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டு உள்ளதாக மாநில அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

Views: - 295

0

0