வழக்கறிஞர் பணியா..?ரூ.1 அபராதமா..? பிரசாந்த் பூசனுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்..!

31 August 2020, 12:36 pm
Quick Share

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசனுக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளை டிவிட்டரில் விமர்ச்சித்த விவகாரத்தில் சிக்கிய பிரசாந்த் பூஷன் குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவர் மூத்த வழக்கறிஞர் என்பதால் மன்னிப்பு கோரினால் அவரை விடுவிக்க முடியும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இதற்கான அவகாசமும் பிரசாந்த் பூஷணுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை மன்னிப்பு கேட்காத பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில், வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த சூழலில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று அறிவிக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதில், நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டதற்கு ரூ.1 அபராதம் செலுத்த வேண்டும் என்ற தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார். மேலும், அபராதத்தை செலுத்தவில்லை என்றால் 3 ஆண்டுகள் வழக்கறிஞர் பணியை தொடர முடியாத வகையில் தண்டனை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி செக் வைத்துள்ளார்.

Views: - 7

0

0