அசாமில் ரூ.35 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள் பறிமுதல்..!

28 August 2020, 10:26 am
Quick Share

அசாம் மாநிலம் மெல்பக் பகுதியில் ரூ. 35 லட்சம் மதிப்புடைய 10 ஆயிரம் போதை மாத்திரைகளை ரைபிள்ஸ் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அசாம் மற்றும் மிசோராம் மாநிலங்களுக்கு இடைப்பட்ட மெல்பக் பகுதியில் ரைபிள்ஸ் படையினர் வாகன சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வாகனம் ஒன்றில் போதை மாத்திரைகள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சோதனையை தீவிரப்படுத்தின ரைபிள்ஸ் படையினர், ரூ.35 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரம் போதை மாத்திரைகளை பரிமுதல் செய்துள்ளனர். அதீத போதையை தூண்டக்கூடி இந்த போதை மாத்திரைகள், மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடும் தன்மை கொண்டவை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள அப்பகுதிக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகள் குறித்தும் அவர்களின் பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 29

0

0