லடாக் எல்லை விவகாரம் : அறிக்கை வெளியிட சரத்பவார் வலியுறுத்தல்..!

12 September 2020, 1:13 pm
Quick Share

இந்தியா-சீனா எல்லை நிலவரம் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய – சீன எல்லையான லடாக்கில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் தாக்குதல்கள் வலுபெற்றுள்ளது. சமீபத்தில் இந்திய எல்லைகள் புகுந்த சீன ராணுவம் ராணுவ வீரகர்களை நோக்கி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் சீன ராணுவத்தை விரட்டி அடித்தனர். இந்த சூழலில் நேற்று, லடாக் எல்லையில் நீடிக்கும் மோதல் போக்கிற்கு 5 அம்ச திட்டம் மூலம் தீர்வு காண ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா மற்றும் சீனா ஒப்புக்கொண்டது.

ராணுவரீதியான பேச்சுவார்த்தையை தொடர, வீரர்கள் முகாம்களுக்கு இடையே இடைவெளி ஏற்படுத்தவும், படைகள் அனைத்தும் வாபஸ் பெற்று பதற்றத்தை குறைக்கவும், இரு நாடுகளும் ஒப்புக்கொண்டனர் என செய்தி வெளியானது.

இந்தநிலையில் இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். லடாக் எல்லையில் என்னதான் நடக்கிறது என கேட்டுள்ள அவர், உண்மை நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Views: - 0

0

0