தெலுங்கானாவை அலற வைத்த சீரியல் கில்லர் : “சிவப்பு ரோஜாக்கள்“ பட பாணியில் நடந்த 21 கொலைகள்!!

27 January 2021, 2:28 pm
Serial Killer Arrest - Updatenews360
Quick Share

தெலங்கானா : அடுத்தடுத்து 21 பெண்களை கொலை செய்து தலைமறைவாக இருந்த ராமுலு என்ற சீரியல் கொலைகாரனை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த ஜனவரி 1ஆம தேதி காவால ஆனந்தைய என்பவர் தனது மனைவி வெங்கடம்மா டிசம்பர் 30ஆம் தேதி காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து ஜனவரி 4ஆம தேதி வெங்கடம்மாவின் சடலம் அனுகுஷ்புர் என்ற கிராமம் அருகே உள்ள தண்டவாளத்தில் மீட்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை ஆராய்ந்து பார்தத போலீசார், பாலியல் உறவுக்காக வெங்கடம்மாவை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றது தெரியவந்தது.

பின்னர் நடத்திய விசாரணையில் குற்றவாளியின் பெயர் ராமுலு என்பதும், போதையில் வெங்கடம்மாவை கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதே போல கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு பெண்ணை கடத்தி சென்று கொலை செய்த சம்பவத்தில் ராமுலு ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது. அந்த பெண்ணின் புடவையை வைத்து அவரை கழுத்தை நெறித்து கொலை செய்து, நகைகளை திருடிச் சென்றது அம்பலமானது.

யார் இந்த ராமுலு? எதற்காக கொலை செய்கிறார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. 45 வயதான ராமுலு சங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர்.

இந்த இரண்டு கொலையை மட்டும் இவர் செய்யவில்லை, கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டில் இடைப்பட்ட காலத்தில் ராமுலு 16 கொலைகளில் ஈடுபட்டு ஆயுள் தண்டனை பெற்றவர் என்பதும், ஆனால் டிசம்பர் 12ஆம் தேதி சிறையில் இருந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது மற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து தப்பிசென்றதும் தெரியவந்துள்ளது.

வெளியே வந்த ராமுலு மீண்டும் தனது கொடூர புத்தியை காண்பிக்க தொடங்கினார். இதனால் மீண்டும் கடந்த 2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டு விடுதலையானார். தற்போது இந்த இரு கொலைக்காக மீண்டும் பதுங்கியிருந்த ராமுலுவை கைது செய்து போலீசார் , அவனிடம் விசாரணை நடத்தினர்.

அவன் கூறிய தகவலில், 21 வயதில் பெற்றோரால் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்ட மனைவி திருமணத்தை மீறிய உறவால் வேறொருவருடன் சென்றுவிட்டதாகவும், ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் பெண்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு, திருமணத்திற்கு பிறகு தவறான உறவில் ஈடுபடும் பெண்களை கடத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான்.

இதைக் கேட்டு அதிர்ந்து போன போலீசார், ராமுலுவின் மனநிலையில் சிறிதும் கூட மாற்றம் ஏற்படவில்லை என்றும், இவரை வெளியே விட்டால் இன்னும் எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் நிகழ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். காணாமல் போன இரண்டு பெண்களைக் குறித்து புகார் பெற்று விசாரணையைத் தொடங்கிய போலீசார், காணாமல் போன மேலும் பல பெண்களின் பட்டியலைத் தயாரித்து விசாரணை நடத்தியதில 21 பேரை ராமுலு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவை அதிர வைத்த சைக்கோ கில்லரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், சிவப்பு ரோஜாக்கள் பட பாணியில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1

0

0