வட இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்…!!

26 November 2020, 9:03 am
delhi snow - updatenews360
Quick Share

புதுடெல்லி: டெல்லி உட்பட பல வட மாநிலங்களில் வெள்ளிக்கிழமை முதல் கடும் குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நவம்பர் 27 முதல் 29 வரை வடமேற்கு இந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை வீழ்ச்சியடையக்கூடும். இதனால் பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி, வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் குளிர் அலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள மேற்கு பகுதியில் வானிலை மாற்றம் காணப்படுகிறது. அதன் காரணமாக நவம்பர் 25 முதல் ஜம்மு-காஷ்மீர், லடாக், கில்ஜித்-பால்டிஸ்தான், முசாபராபாத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் ஏற்கனவே பனிப்பொழிவு தொடங்கிவிட்டது. ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. வடக்கு காஷ்மீரில் சாலையில் 10 செ.மீ உயரத்திற்கு பனி மூடியிருந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளும் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளது. பாலைவன மாநிலமான ராஜஸ்தானிலும் குளிர் நிலவி வருகிறது.

Views: - 0

0

0