சமூக ஆர்வலர் என்ற போர்வையில் பிஞ்சுக் குழந்தைகளிடம் பாலியல் சேட்டை : அரை நிர்வாணமாக்கி அடித்து துவைத்த பொதுமக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2021, 12:57 pm
Rowdy Harrassed -Updatenews360
Quick Share

ஆந்திரா : ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் சமூக ஆர்வலர் என்ற பெயரில் பாலியல் ரீதியான சேட்டையில் ஈடுபட்ட ரவுடியை தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பெண்கள்.

ஆந்திர மாநிலம் காஜூவாக்க பகுதியில் உள்ள பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி தோமன் சின்னா ராவ். போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள தோமன் சின்னாராவ் தன்னை நல்லவன் என்று காண்பித்து கொள்வதற்காக என்ஜிஓ அமைப்பு ஒன்றை துவக்கி சமூக சேவையில் ஈடுபடுவது போல் நடித்து வந்தான்.

இந்தநிலையில் நேற்று காலை அங்கு உள்ள பள்ளிக்கு சென்ற தோமன் சின்னாராவ் தலைமை ஆசிரியரிடம் பேசி பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பென்சில், ரப்பர் ஆகியவற்றை கொடுத்தான்.

பின்னர் மீதி இருந்த பென்சில், ரப்பர் ஆகிவற்றை வீட்டுக்கு எடுத்து சென்ற தோமன் சின்னாராவ் நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளிடம் வீட்டுக்கு வந்தால் பென்சில், பேனா, ரப்பர் கொடுக்கிறேன் என்று கூறி அவர்களை மாலை வேளையில் வீட்டுக்கு வரவழைத்தான்.

பென்சில், பேனா, ரப்பர் ஆகியவை கிடைக்கும் என்ற ஆசையில் அவனுடைய வீட்டுக்கு வந்த மாணவிகளிடம் அவன் பாலியல் ரீதியிலான சேட்டைகள் ஈடுபட்டுள்ளான். இதுபற்றி மாணவிகள் வீட்டுக்கு சென்ற பின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

ஆவேசமடைந்த பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் ஆகியோர் தோமன் சின்னாராவ் வீட்டுக்கு சென்று அவனை வெளியே இழுத்து வந்து கடுமையாக தாக்கினர். இந்நிலையில் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த மல்காபுரம் போலீசார் நிலைமையை சமாளிக்க முயன்றனர்.

தோமன் சின்னாராவ் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவனை கைது செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்தி வந்தனர். எனவே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவனை கைது செய்த போலீசார் போக்கோ சட்டத்தின் கீழ் அவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்

Views: - 244

0

0