மீண்டும் சிறையில் அடைக்கப்படும் ஆர்யன்கான்… 2வது முறையாக ஜாமீன் மனு தள்ளுபடி : மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Author: Babu Lakshmanan
20 October 2021, 4:04 pm
Aryan Khan In Trouble -Updatenews360
Quick Share

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு நடத்திய சோதனையில், போதைப் பொருட்களை பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்ட பிரபலங்களும் சிக்கினர்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு 14 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது. அதன்பேரில், அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன்கான் தரப்பில் 2வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஆர்யன்கான் உள்ளிட்டோரிடம் எவ்வித போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், இந்த வழக்கு திட்டமிட்டு தொடுக்கப்பட்ட வழக்கு என்றும் வாதிடப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்க போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனடிப்படையில், ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்டோரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Views: - 269

0

0