பொதுவெளியில் முஹரம் கொண்டாட தடை விதிப்பு..! இஸ்லாமிய மத குரு காட்டம்..!

21 August 2020, 1:45 pm
muharram_procession_updatenews360
Quick Share

லக்னோ போலீஸ் கமிஷனர் அலுவலகம், அனைத்து முஹரம் சடங்குகளுக்கும் தடை விதித்ததற்கு ஷியா மதகுரு மௌலானா கல்பே ஜாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், முஹரமுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி, இமாம்பரா மசூதியில் பிரசங்கங்கள் நடத்தப் போவதாகவும், அரசு விரும்பினால், தன்னைக் கைது செய்யலாம் என்றும் ஜாவத் கூறியுள்ளார்.

மதகுரு காவல்துறை ஆணையரிடம் இது தொடர்பாக எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அவர்களின் உத்தரவு தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல் சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்கி வருவதாகவும் கூறினார்.

“இது கொரோனா குறித்த உலக சுகாதார அமைப்பு, மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு எதிரானது. கொரோனா நெறிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால் இந்த புதிய வழிகாட்டுதலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இன்று முதல் பிரசங்கத்தில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை தெர்மல் ஸ்கேனிங், சானிட்டைசர், சமூக இடைவெளி மற்றும் முககவசங்களுடன் 50’ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும்.” என்று ஜாவத் கூறினார்.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் காஷ்மீரில் கொரோனா விதிமுறைகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜாவத் கூறினார்.

இதற்கிடையில், இன்று தொடங்கும் முஹரமுக்கு தாசியா தயாரிப்பாளர்கள் கடை அமைத்துள்ள நிலையில், மௌலானா கல்பே ஜாவத் மற்றும் அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரிய பொதுச் செயலாளர் மௌலானா யசூப் அப்பாஸ் உள்ளிட்ட பல மதகுருமார்கள் தாசியா தயாரிப்பாளர்களை காவல்துறையினர் அச்சுறுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

முகமதுவின் தியாக பேரன் ஹுசைனின் கல்லறையின் பிரதிதான் தாசியா. இது முஹரம் காலத்தில் ஊர்வலங்களில் கொண்டு செல்லப்படுகிறது.

இமாம் ஹுசைனின் கல்லறைக்கு பிரதிபலிப்பாக முஹரத்தின் போது இந்த காகித தாசியாக்கள் பாரம்பரியமாக வீடுகளில் வைக்கப்படுகின்றன.

Views: - 41

0

0