கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டுக்கொண்ட சீரம் நிறுவன சிஇஓ ஆதார் பூனவல்லா..! தடுப்பூசி திட்டம் வெற்றி பெற வாழ்த்து..!

16 January 2021, 2:27 pm
adar_poonawalla_updatenews360
Quick Share

நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கியுள்ள நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, இன்று புனேவில் தனது நிறுவனத்தின் தடுப்பூசியான கோவிட்ஷீல்ட் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். 

தனது ட்விட்டர் பக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் வீடியோவை பகிர்ந்ததோடு, உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி வெளியிடுவதில் இந்தியாவும் நரேந்திர மோடி ஜியும் பெரும் வெற்றியைப் பெற விரும்புகிறேன்.

கோவிஷீல்ட் இந்த வரலாற்று முயற்சியின் ஒரு பகுதியாகும். அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அங்கீகரிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நமது முன்களப் பணியாளர்களுக்கு முன்மாதிரியாக தடுப்பூசியை நானும் எடுத்துக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு வாங்கிய 1.1 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசி அளவுகளில் 95 சதவீதம் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் கொரோனா வைரஸுக்கு எதிராக நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்.

Views: - 8

0

0