தரையிறங்கும் விமானத்தை தாக்க வந்த மர்ம பொருள்? பதற வைக்கும் வைரல் வீடியோ

22 January 2021, 3:50 pm
Quick Share

சிங்கப்பூர் விமானம் தரையிறங்கி கொண்டிருக்கும் போது, பறக்கும் மர்ம பொருள், இறக்கையின் அருகே நெருங்கிச் சென்ற நிகழ்வின் வீடியோ, இணையவெளியில் வெகுவேகமாக பரவி வருகிறது.

சிங்கப்பூரிலிருந்து பயணிகளுடன் புறப்பட்ட விமானம், ஜனவரி 17ம் தேதி, சுவிட்சர்லாந்தின் ஜூரிச் விமான நிலையத்தில் தரையிறங்க ஆயத்தமாகி கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த பயணி, விமானம் தரையிறங்குவதை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது விமானத்தின் இறக்கையின் அருகே ஏதோ ஒரு மர்ம பொருள் நெருங்கி சென்றது. பயணிகள் அச்சத்தில் கூக்குரல் இடத் துவங்கினர். உடனே சுதாரித்த பைலட், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் இறங்கினார்.

பதட்டம் அடைந்த பயணிகளை அமைதி காக்குமாறு பைலட் வேண்டுகோள் விதித்தார். அந்த மர்ம்ப்பொருள் நெருங்கிச்சென்றதில், விமானத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் மேலும் விளக்கம் அளித்தார்.

விமானத்தை நெருங்கிச்சென்ற பறக்கும் அந்த மர்ம பொருள், அந்த வீடியோவில் பதிவாகி இருந்ததால், அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிகழ்வு குறித்து நிபுணர்கள் தெரிவித்துள்ளதாவது, விமானம் தரை இறங்கி கொண்டு இருக்கும் போது கடந்து சென்றதோடு மட்டுமல்லாது, நெருங்கிச்சென்ற மர்ம பொருள், டிரோனோ இல்லது பறவையோ இல்லை. ஏனெனில், அவை ரேடாரில் புலப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஹவாய் தீவின் ஓஹூ பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் வானில் அடர் நீலநிறம் கொண்ட பறக்கும் மர்ம பொருள் தோன்றி கடலில் சென்று மறைந்த நிகழ்வு, ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0