இந்திய பயணிகள் வருவதற்கு அனுமதி:பச்சைக் கொடி காட்டிய சிங்கப்பூர்

Author: Udhayakumar Raman
24 October 2021, 10:32 pm
Canada_Airport_UpdateNews360
Quick Share

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு இன்னும் எந்த நாட்டிலும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதைக் கட்டுக்குள் வைப்பது சிரமமாக உள்ளது.இந்த உருமாறிய கொரோனா வகைகள் பல்வேறு நாடுகளிலும் தோன்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு நாட்டில் வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்தாலும், அங்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளால் உருமாறிய கொரோனா பரவும் வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. குறிப்பாக, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளாத நாடுகளுக்கும் பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் கடந்த சில மாதங்களாகவே வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இதையடுத்து அந்நாட்டு அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மெல்லத் தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர் அரசு பல்வேறு நாடுகளுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. கொரோனா பாதிப்பு தணிந்ததற்கு ஏற்ப பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது சிங்கப்பூர் அரசு.இதன்படி, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை ரத்து செய்து சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இந்தியா, வங்கதேசம், மியான்மார், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை ரத்து செய்து சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இந்தியா, வங்கதேசம், மியான்மார், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில், இந்தியா, வங்கதேசம், மியான்மார், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் 14 நாட்களுக்குள் சென்று வந்தவர்கள் சிங்கப்பூருக்குள் வருவதற்கும், சிங்கப்பூர் வழியாக பயணிக்கவும் அனுமதிக்கப்படும்.அக்டோபர் 26ஆம் தேதி முதல் இவ்விதிமுறைகள் அமல்படுத்தப்படும். அக்டோபர் 26ஆம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட மேற்கூறிய நாடுகளில் இருந்து பயணிகள் சிங்கப்பூருக்கு பயணிக்கலாம்.

Views: - 135

0

0