ஆப்கானிஸ்தான் நிலவரம்: மத்திய அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

Author: Aarthi Sivakumar
17 August 2021, 8:00 pm
Quick Share

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனார்.

ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தற்போது ஆப்கன் நிலவரம் குறித்தும், தீவிர ஆலோசனை நடைபெற்றது.

முன்னதாக ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென்னுடன், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் இந்த மாதத் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளதையடுத்து அவசர கூட்டத்தில் பங்கேற்க ஜெய்சங்கர் நியூயார்க் சென்றுள்ளார்.

Views: - 313

0

0