சத்தீஸ்கர் மாநிலத்தில் 6 மாவோயிஸ்ட் போராளிகள் கைது..!

10 November 2020, 10:10 am
moviyist - updatenews360
Quick Share

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு பெண் உள்பட 6 நக்சலைட் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள தாமவரம் வனப்பகுதியில் கூட்டுப் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனப்பகுதியில் மறைந்திருந்த நக்சலைட்டுகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டினைத் தொடர்ந்து, அங்கு பதுங்கியிருந்த யுகா லக்கி என்ற பெண் போராளி உள்பட 3 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், பசகுடா பகுதியிலும் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில் 3 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 14

0

0