75வது சுதந்திர தின கொண்டாட்டம்: எல்லையில் இனிப்புகளை பரிமாறிக் கொண்ட வீரர்கள்..!!

Author: Aarthi Sivakumar
15 August 2021, 2:30 pm
Quick Share

ஸ்ரீநகர் : பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி ஜம்மு – காஷ்மீர் எல்லை பகுதியில் இருநாடுகளின் வீரர்கள் இன்று இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் தங்தார் செக்டார் எல்லை பகுதியில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு, நம் வீரர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் தரப்பிலும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இது குறித்து ராணுவ அதிகாரி கூறுகையில், இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று எல்லை பகுதியில் அந்நாட்டு ராணுவத்தினருக்கு, நம் வீரர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

எல்லை பகுதி கிராமங்களில் அமைதியைஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை அங்குள்ள மக்கள் பாராட்டுகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 307

0

0