பெற்ற தந்தையை செங்கலாலே அடித்துக்கொன்ற மகன்…! எல்லாம் இதற்காகவா…?

14 February 2020, 2:56 pm
Quick Share

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே போதை மருந்து கலாச்சாரம் தலையோங்கி இருக்கிறது. இதனால் ஏற்படும் குற்றங்களை மையமாக வைத்து பாலிவுட்டில் “Udta பஞ்சாப்” என்ற படம் மூன்று ஆண்டிற்கு முன் திரைக்கு வந்தது. அந்த படத்தில் வந்த சம்பவத்தைப்போலவே நேற்று பஞ்சாப் மாநிலம் முண்டி கறார் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.


அந்த கிராமத்தில் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தவர் ஹான்ஸ் ராஜ். கூலி வேலைப் பார்பவர். இவருக்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள். கடந்த இரண்டு ஆண்டிற்கு முன் இவரது மனைவி மறைந்தபின் தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்துக்கொடுத்துவிட்டு தனது மகன்களுடன் வாழ்ந்துவந்தார். தன் இரு மகன்களும் எந்த வேலைக்கும் செல்லவில்லை.


மேலும் இவருடைய மூத்த மகனாகிய ரிங்கு போதைப்பொருளுக்கு அடிமையானவர். வழக்கமாக போதை மருந்து வாங்க தனது தந்தையிடம் பணம் கேப்பார். நேற்று ராஜ் பணம் தரமறுத்ததால் அவரை அங்கிருந்த செங்கலை வைத்து தலையில் அடித்து கொன்றுவிட்டார். அவருடைய தம்பி தொடுத்த வழக்கில் அவரைக்கைது செய்துள்ளனர்.

Leave a Reply