தந்தை எங்கே என கேட்டதற்கு புகைப்படத்தை முத்தமிட்டு காட்டிய மகன் : கலங்க வைக்கும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2021, 7:30 pm
Kid Kiss his Dad Photo -Updatenews360
Quick Share

ஆந்திரா : தந்தை உயிரிழந்தது கூட தெரியாமல் ராணுவ வீரரான தன் தந்தையின் புகைப்படத்திற்கு முத்தமிட்ட மகனின் வீடியோ வெளியாகி காண்போர் கண்களை கலங்க வைத்துள்ளது.

குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில் அதில் ஒருவரான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கொர்லகோட்டா பகுதியில் ரேகடா கிராமத்தை சேர்ந்த சாய்தேஜ்.

இதையடுத்து நேற்று அவரது உடல் அவரது சொந்த ஊரான ரேகடா கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சாய்தேஜ்க்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

தந்தை எங்கே என கேட்டதற்கு அவரது நான்கு வயது மகன் அவர்கள் வீட்டிலுள்ள தன் தந்தையின் புகைப்படத்திற்கு முத்தமிட்ட காட்சிகள் அங்கிருந்த கிராம மக்களையும் உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நான்கு வயது குழந்தையிடம் உன் தந்தை எங்கே எனக் கேட்டபோது புகைப்படத்தை காட்டி முத்தமிட்ட வீடியோ காண்போர் கண்களை கலங்க வைத்துள்ளது.

Views: - 388

0

0