மரணப் படுக்கையில் இருக்கும் சீனியர் டான்ஸ் மாஸ்டர் : டுவிட்டரை பார்த்து உடனே ஆதரவுக்கரம் நீட்டிய சோனுசூட்…!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
25 November 2021, 7:50 pm
sonu sood - siva shankar - updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சீனியர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கருக்கு பாலிவுட் நடிகர் சோனுசூட் உதவி செய்ய முன்வந்துள்ளார்

சூர்யவம்சம், வெற்றிக் கொடிகட்டு, வரலாறு, அருந்ததி, பாகுபலி, பரதேசி உள்ளிட்ட பல தமிழ் மற்று தெலுங்கு படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர் சிவசங்கர். இவர் மகதீரா படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தானா சேர்ந்த கூட்டம், சர்கார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிம் அவர் நடித்துள்ளார்.

நடன இயக்குநராகவும், நடிகராகவும் திரைத்துறையில் வலம் வந்த இவருக்கு அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், அவருக்கு உயர்தர சிகிச்சை வழங்க அதிகம் செலவாகும் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, தனது தந்தையின் மேல் சிகிச்சைக்காக சக நடிகர்கள் உதவ வேண்டும் என்று சிவசங்கரின் மகன் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று சீனியர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கருக்கு பாலிவுட் நடிகர் சோனுசூட் உதவி செய்ய முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், ” நான் ஏற்கனவே அவரது குடும்பத்துடன் தொடர்பில் இருந்து வருகிறேன். அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்,” எனக் கூறியுள்ளார்.

Views: - 173

0

0

Leave a Reply