சரத் பவாரை சந்தித்த நடிகர் சோனு சூத்..! மும்பை மாநகராட்சியின் வழக்கில் சமரசமாகச் செல்ல முடிவா..?

13 January 2021, 1:47 pm
Sonu_Sood_Sharad_Pawar_UpdateNews360
Quick Share

பாலிவுட் நடிகர் சோனு சூத், தனக்கு எதிராக மும்பை மாநகராட்சி சட்டவிரோதமாக கட்டுமானம் மேற்கொண்டதாக போலீஸ் புகார் அளித்துள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) தலைவர் சரத் பவாரை சந்தித்தார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனு சூத், கொரோனா ஊரடங்கின் போது, புலம்பெயர்ந்தோர், ஏழைகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கிய தன்னலமற்ற உதவியால், 2020’ஆம் ஆண்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.  

இந்நிலையில் அனுமதியின்றி ஒரு குடியிருப்பு கட்டிடத்தை ஹோட்டலாக மாற்றியதாக சோனு சூத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி, மும்பை மாநகராட்சி கடந்த வாரம் மும்பையின் ஜுஹு காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

கடந்த ஆண்டு அக்டோபரில் அவருக்கு இது தொடர்பான அறிவிப்பு வழங்கப்பட்ட பின்னரும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தைத் தொடர்ந்ததாக கண்டறிந்த பின்னர் புகார் கடிதம் போலீசாருக்கு அனுப்பப்பட்டது என மும்பை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் போலீசார் இன்னும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை.

இதற்கிடையே மும்பை மாநகராட்சியின் புகாரை தள்ளுபடி செய்ய நடிகர் சோனு சூத் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா ஆளும் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இன்று இந்த சந்திப்பு நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் சந்திப்பின் பின்னணியில் உள்ள காரணம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

ஆனால் மும்பை மாநகராட்சியின் வழக்கில் சமரசம் எட்டுவதற்காகத்தான் சரத் பவாரை, நடிகர் சோனு சூத் சந்தித்துள்ளார் என தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Views: - 13

0

0