கடந்த ஜனவரியில் 22.33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு: தென்னிந்தியாவில் 121 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலை …!!

9 February 2021, 9:12 am
veppam pathivu - updatenews360
Quick Share

புதுடெல்லி: தென்னிந்தியாவில் 121 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த ஜனவரியில் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் 62 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த ஜனவரியில் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது.

இவற்றில் குறிப்பிடும்படியாக தென்னிந்தியாவில் அதிகம் வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த 121 ஆண்டுகளில் 22.33 டிகிரி செல்சியஸ் என்ற அதிகபட்ச வெப்பநிலை தென்னிந்தியாவில் கடந்த ஜனவரியில் பதிவாகி உள்ளது. கடந்த 1919ம் ஆண்டில் இது 22.14 டிகிரி செல்சியஸ் ஆகவும், கடந்த 2020ம் ஆண்டில் இது 22.93 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தது. மத்திய இந்தியாவில் கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 1982ம் ஆண்டுக்கு பின்னர் 14.82 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

கடந்த 1958ம் ஆண்டில் 121 ஆண்டுகளில் இல்லாத வகையில் 15.06 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது என அறிவித்து உள்ளது.

Views: - 0

0

0