இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா?

10 September 2020, 12:54 pm
Rafael Plane - updatenews360
Quick Share

பிரான்ஸ் நாட்டுத் தயாரிப்பான ரஃபேல் போர் விமானம் இந்திய விமானப்படை தளத்தில் இணைந்துள்ளன. இது குறித்த சிறப்பம்சங்கள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

  • பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் ரஃபேல் போர் விமானத்தை தயாரிக்கிறது.
  • ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லும் திறன் கொண்டது
  • அதிகபட்சமாக மணிக்கு 2 ஆயிரத்து 223 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
  • எதிரிகளை அடையாளம் காண்பதற்கான ரேடார் எச்சரிக்கை கருவியும் ரஃபேல் போர் விமானத்தில் உள்ளது.
  • துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணைகள் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் இந்த விமானத்தில் பொருத்தலாம்.
  • இந்த விமானத்தோட எடை சமார் 10 டன், அதாவது பத்தாயிரம் கிலோ இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • எரிபொருள் மற்றும் ஆயுதங்கள் நிரப்பப்பட்டவுடன் 24 ஆயிரத்து 500 கிலோவாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
  • விமானத்தின் நீளம் 15.3 மீட்டர் கொண்டதாகவும், இறக்கையின் நீளம் 10.8 மீட்டர் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ரஃபேல் விமானத்தின் உயரம் 5.3 மீட்டர்.
  • ஒரு விமானத்தின் விலை ரூ.731 கோடியாகும்.
  • 24 மணி நேரத்தில் 5 முறை ரஃபேல் விமானம் மூலம் தாக்குதல் நடத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சாகும்.

Views: - 0

0

0