திருப்பதி ஏழுமலையானுக்கு கோவையில் இருந்து பிரத்யேக தங்க வாள் : காணிக்கையாக வழங்கிய ஐதராபாத் பக்தர்!!

19 July 2021, 1:22 pm
Thirupathi Sword - Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையானுக்கு கோவையில் இருந்து ஆறரை கிலோ எடையுள்ள தங்க வாள் செய்த ஐதராபாத் பக்தர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் எம்.எஸ்.பிரசாத் திருப்பதி ஏழுமலையானுக்கு இன்று காலை ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ஆறரை கிலோ எடையுடைய தங்க வாள் ஒன்றை காணிக்கையாக சமர்ப்பித்தார்.

மூலவர் ஏழுமலையானுக்கு அலங்கரிக்கும் வகையில் சரியான அளவீடுகள் உடன் கோயம்பத்தூரில் தயார் செய்யப்பட்ட அந்த தங்க வாளை தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கிய பக்தர் எம்.எஸ்.பிரசாதிற்கு தேவஸ்தானம் சார்பில் வேத ஆசீர்வாதம், தீர்த்தப் பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன.

Views: - 111

0

0