சீட்டு கட்டுப் போல சரிந்த இலங்கை அணி விக்கெட்டுகள்.. சீறிப் பாய்ந்த சிராஜ் : உலக சாதனை படைத்த இந்தியா!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2023, 4:49 pm
Siraj - Updatenews360
Quick Share

சீட்டு கட்டுப் போல சரிந்த இலங்கை அணி விக்கெட்டுகள்.. சீறிப் பாய்ந்த சிராஜ் : உலக சாதனை படைத்த இந்தியா!!!

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை இந்திய அணி எதிர்கொள்கிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி தொடக்கத்தில் இருந்தே இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தொடங்கிய இலங்கை அணி 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் சிராஜ் மட்டும் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

முதல் ஓவரிலேயே குஷல் பெரேரா விக்கெட்டை பும்ரா எடுத்தார். அதன்பின் 4வது ஓவரில் 1 பந்தில் ஒரு விக்கெட், 3 மற்றும் 4வது பந்தில் தலா ஒரு விக்கெட், கடைசி பந்தில் ஒரு விக்கெட் என்று சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதன்பின் 6வது ஓவரில் மீண்டும் சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தார்.

இந்த 4வது ஓவரின் 5வது பந்தில் ஹாட் டிரிக் எடுக்க வேண்டிய நிலையில் சிராஜ் பவுண்டரி கொடுத்தார். இந்த பந்தை பிடிக்க சிராஜ் ஸ்பிரிண்ட் செய்து ஓடியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. இதை பார்த்து கோலி மைதானத்தில் குலுங்கி குலுங்கி சிரித்தார். அவரை பார்த்து சுப்மான் கில்லும் குலுங்கி குலுங்கி சிரித்தார். இந்த காட்சிகள் வைரலாகி உள்ளன.

12 ஓவரில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது. இதில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.

Views: - 140

0

0