கொரோனா தொற்று எதிரொலி: பத்மநாபசாமி கோவில் வரும் 15ந்தேதி வரை மூடப்படுவதாக அறிவிப்பு

Author: Aarthi
9 October 2020, 1:36 pm
padmanapuram temple - updatenews360
Quick Share

திருவனந்தபுரம்: கொரோனா தொற்று எதிரொலியாக கேரளாவில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவில் வரும் 15ந்தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்மநாபசாமி கோவில் அமைந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், சிறிய மற்றும் பெரிய என அனைத்து கோவில்களும் மூடப்பட்டன.

இதன் பின்னர் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கோவில்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டத்தை அடுத்து கேரளாவில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவிலும் திறக்கப்பட்டது.

எனினும், சமூக இடைவெளி, குறைந்த அளவிலான பக்தர்கள் என கட்டுப்பாடுகளுடன் சில விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், அந்த கோவிலில் உள்ள 2 அர்ச்சகர்கள் உள்பட கோவில் பணியாளர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகம் கோவிலை மூடுவது என முடிவு செய்துள்ளது. எனவே, கேரளாவில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவில் வரும் 15ந்தேதி வரை மூடப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Views: - 38

0

0